|
சேலம்: சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ், விதவை பெண்ணுக்கு சத்துணவுத்துறையில், "ஆயா' வேலை வழங்க வேண்டும், எனக் கோரி கலெக்டரிடம் மனு அளித்தார். சேலம், சர்க்கார் கொல்லப்பட்டியைச் சேர்ந்தவர் பத்மாவதி(33). அவரது கணவர் மணிவண்ணன்(36). சில மாதங்களுக்கு முன், உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மூன்று குழந்தைகளுடன் தவித்துக் கொண்டிருந்த பத்மாவதி, அ.தி.மு.க., பிரமுகர்கள் சிலரின் உதவியுடன், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வான செல்வராஜை சந்தித்து உதவி கோரினார். அதை தொடர்ந்து, எம்.எல்.ஏ., லட்டர் பேடில், பத்மாவதியின் நிலையை எழுதிய செல்வராஜ், கலெக்டர் மகரபூஷணம், ஆர்.டி.ஓ., பிரசன்னராமசாமி ஆகியோரை சந்தித்து, சத்துணவுத்துறையில், பத்மாவதிக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், என மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக, உறுதியளித்தனர்.
நன்றி : தினமலர்
|